மத்திய தொகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடங்கள் நிதியமைச்சர் திறந்து வைத்தார்.

Published Date: March 20, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி நிதியின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் உள்பட புதிய ரேஷன் கடை கட்டிடங்களை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரை தத்தனேரி சாலை அருள்தாஸ் புரம் வார்டு 22 திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மதுரை மத்திய சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அதேபோல் வார்டு 58-ல் பூங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும் வார்ட் 57 ஆரப்பாளையம் டிடி சாலையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தையும் நிதி அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டி செல்வி, வட்டச் செயலாளர் சீனி ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Media: Dinakaran